முக்கிய செய்திகள்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…


கோலாலம்பூர் ஊழல் புகாரில், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.

மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியே அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதில் பல ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில், மலேசிய வளர்ச்சி திட்டத்தில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் நஜீப் ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.