மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார்
தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த நிலவரத்தை மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் நாளை அறிவிப்பார்.
முடித் திருத்தும் நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், அழகுப் பராமரிப்புச் சேவைகள் போன்றவை வரும் புதன்கிழமை முதல் இயங்கும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் கூறியுள்ளார்.
திறந்தவெளிச் சந்தைகள், காலை, இரவு சந்தைகள், விழாக்காலச் சந்தைகள் போன்றவை இம்மாதம் 15ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க கடை நடத்துனர்கள், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த நிலவரத்தை மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் நாளை அறிவிப்பார் என்றும் திரு இஸ்மாயில் சப்ரி கூறினார்.