மலேசிய மணல் விவகாரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை..


மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணல் விவகாரம்குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.
‘மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, பேரம் படியவில்லை என்பதால், தூத்துக்குடி துறைமுகத்திலேயே முடக்கிவைத்துள்ளார்கள்’’ என அரசுக்கு எதிராகக் கொடிபிடிக்கின்றன எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், நீதிமன்றமும் குட்டு வைத்திருக்கிறது. ‘‘2014-ல், இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படிதான் உரிமம் பெற்று, உரிய வரிகட்டி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், துறைமுகத்திலிருந்து மணலை எடுத்துச்செல்ல தடை விதித்திருப்பது ஏன்? மணல் ஏற்றிச்சென்ற லாரிகளைப் பறிமுதல் செய்திருப்பது சட்டவிரோதம்’’ எனச் சொல்லி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.