முக்கிய செய்திகள்

மலேசியாவிலிருந்து 2 விமானங்களில் தமிழர்களை அழைத்துவர திட்டம்..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியத் தமிழர்களை அழைத்து வர 2 ஏர் இந்தியா விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விமானங்கள் மூலம் சென்னை,திருச்சி விமானநிலையங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இந்தியா வருபவ்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லையென்ற சான்று பெற்றிருக்க வேண்டும்.

பயணச்செலவு சம்பந்தப்பட்ட நபரே செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது போல் மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் 2 கப்பல்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.