மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் ரசாக் 65, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் கடந்த 2013-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில் தனது பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் திடீரென நேற்று நாடாளுமன்றம் . கலைக்கப்பட்டதாக தொலைக்காட்சி சானல் வாயிலாக அறிவித்தார்.
நஜிப் ரசாக் மீது கடந்த பெருமளவு ஊழல் குற்றசாட்டுகள் எழுந்தன. மேலும் பிரதான எதிர்கட்சி தலைவரும் மாஜி பிரதமருமான மகாதீர் முகமதுவுக்கு எதிராக வரப்போகும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவதில் கடும் சவாலை சந்திக்க வேண்டும் என்பதால் அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி 2 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்தல் தேதியை வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.