கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை – சில விளக்கங்கள்: சார்லஸ்

Malaysian Tamils life in ‘Kabali’

____________________________________________________________________________________________________

 

kabali whats upஇந்த படத்தின் அறிவாளித்தனத்தை முன்னிறுத்தி மக்களுக்கு அந்த அளவு அறிவு இல்லை என்று சொல்லி தோல்வியுறும் படங்களுக்கு சப்பை கட்டும் எண்ணம் என்றைக்கும் எனக்கு இல்லை. அதை ஆதரித்ததும் இல்லை. என்னை பொறுத்தவரை மக்கள் நல்லபடங்களை பெரும்பாலும் ஆதரிக்க தவறியதே இல்லை. மக்கள் ஆதரிக்காத படங்கள் என்னைப்பபொறுத்தவரை முழுமை பெறாத முயற்சியே.

 

இங்கே இதை பதிவிட காரணம் எனக்கு மலேசிய வாழ்க்கையை பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதே. அதை நண்பர்கள் தெரிந்துகொண்டு படம் பார்த்தால் இன்னும் நெருங்கி பார்க்கலாம்.

 

அ) இதில் அனைவரும் மலேசிய தமிழ் மொழியிலேயே பேசியிருக்கிறார்கள். பெரும்பாலும்அபுரிந்துவிடும் என்றாலும் அது சில இடங்கள் புரியாமல் போவதற்கான அல்லது நமக்கும் படத்துக்குமான இடைவெளி உண்டாக்கக்கூடியதே. ஒரு முறை அவற்றை படித்துக்கொள்ளுங்கள்.

 

1. சாவடி – Super அந்த trailer சாவடி bro

2. தெரொவா – மோசமா அந்த படம் தெரொவா இருந்துச்சி

3. கோஸம் – zero

4. காடி – Car 5.

5.பொன்னழகு – ரொம்ப அழகு

6.செம்மை – கொன்ன – செமkabali_2929342f

7. தே-தண்ணி – Tea

8. Nasi – Rice

9. SuSu – பால்

10. Sirap Bandung – Rose milk

11. பசியாறியாச்சா – tiffen சாப்பாட்டாச்சா

12. Kampong (கம்பம்) – கிராமம்

13. teh tarik – ஆற்றிக்கொடுக்கும் Tea

14. memang – OfCourse

15. ஆமா வா – அப்படியா

16. அடாலா கோழிகறி – விருந்து இருக்கு

17. சடையன் – chinese

18. நாட்டான் – Malays

19. பாய்க்கிறது – use பண்றது

20. மாத்திரை – போதை மாத்திரை

21. கூட்டாளி – friend

22. SPM – +2 (12TH Standard)

23. STPM – PUC (Pre university college)

24. கட்டை – Gun

25. macam – அந்த மாதிரி

 

2.மலேசிய தமிழ் மக்களின் பிரச்சனைகள் நம்மூர் பிரச்சனைகள் அல்ல. அதன் வீரியம் நமக்கு தெரியாது.

 

1. கோயில் இடிப்பது – கோயில் இடிப்பது என்பது தான் மலேசியாவில் தோன்றிய மிகப்பெரிய புரட்சியின் அடித்தளம். அதுவே HINDRAF இயக்கம் வலுப்பெற்று இயங்க வித்திட்டது.

 

2.கல்விப்பிரச்சனை – தமிழ் மக்கள் எவ்ளோ நன்றாக படித்தாலும் அங்கே நினைத்த படிப்பை எடுத்து படிக்க இயலாது. அவர்கள் தரும் படிப்பில் தான் சேரவேண்டும். என்னுடைய மச்சான் மாநில அளவில் முதலாவதாக வந்தவர். ஆனால் அவருக்கு மருத்தவத்துவ துறையில் மருத்துவபடிப்பு படிக்க முடியாமல் போனது. மலாய் மக்களுக்கு மட்டுமே அனைத்திலு ம்முன்னுரிமை. நம் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.

 

3. ஆடைவடிவமைப்பும் மற்றும் சூழல் அனைத்தும் மலேசிய சூழலை முடிந்த அளவு சித்தரிக்கிறது. உண்மையில் இது ரஞ்சித்தின் நேர்மையையே காட்டுகிறது. இதுவரை நம் படங்களில் பல படங்கள் மலேசியா சென்றிருக்கிறோம். சில படங்களில் மலேசியா பெண்கள் heroineங்களாக வந்துள்ளார்கள். எந்த படத்திலும் மலேசியாவின் உண்மைதண்மை பதிவாகவில்லை. இதில் தான் முதன்முதலில் பதிவாகியிருக்கிறது.

 

4. இந்த படம் தலித் பிரச்சனையை மட்டுமே பேசுகிறதா. படத்தில் ரஜினி sir தலித்தாக நடித்திருக்கிறார் என்பது உண்மையே. அதன் வழியே தலித்களின் பிரச்சனைகளை பேச ரஞ்சித் (Paranjith Pa) முயற்சித்திருக்கிறார்.    ஆனால் ரஜினி sir எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் அங்கு வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரச்சனைகளை பற்றியதே அன்றி தலித் பிரச்சனை மட்டும் அல்ல. மலேசியாவில் தலித்கள் பெரும்பாண்மை இருப்பினும் அங்கு அனைத்து ஜாதி மக்களும் வாழும் இடமே. அனைவருமே பிரச்சனையை சந்திக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போனாலும் உண்மையில் அங்கு மலேசியன் இந்தியர்கள் என்றாலே இரண்டாம் தரம் தான். ஆதாவது அங்கு வாழும் தெலுங்கு மலையாளம் வடஇந்திய மக்கள் அனைவருக்குமே இந்த பிரச்சனை இருக்கிறது. (இதில் சிலோனிய தமிழர்கள் தனி வகையறா. அவர்கள் இங்கு ஓரளவிற்கு சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவே வாழ்கிறார்கள். காரணம் அவர்கள் பெரும்பாலும் கிராணிகளாக வந்தவர்கள். சிலோனிய தமிழர்களும் மலேசிய தமிழர்களுக்குள் பெண்கொடுக்கும் வழக்கம் கூட அரிதே) அதிகாரம் முழுவதும் மலேகாரர்களிடம். வணிகம் முழுக்க சீனர்களிடம். (சீனர்கள் கடை அடைத்தால் மலேசியா ஸ்தம்பித்துவிடும்) . உண்மையில் நம் மக்கள் மூன்றாம் தரம்.

 

____________________________________________________________________________________________________________

உதிராப் பூக்கள் – 2 : சுந்தரபுத்தன்

உதிரா பூக்கள் – 3 : சுந்தரபுத்தன்

Recent Posts