மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்பு : பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து..

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார்.

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது ஹோலி வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, அவர், இன்று அதிபராக பதவியேற்று கொண்டார். இதற்கான விழா மாலேயில் உள்ள தேசிய மைதானத்தில் நடந்தது.

இந்த விழாவில் இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்றதற்காகவும், அவரது ஆட்சி சிறப்பாக அமையவும் இப்ராஹிமுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமராக மோடி மாலத்தீவுக்கு சென்றது இது முதல்முறையாகும். கடந்த, 2011ம் ஆண்டில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மாலத்தீவு சென்றிருந்தார்.

இதன் பின் தற்போது தான் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார்.

டெல்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்னர் பிரதமர் மோடி கூறியதாவது:

மாலத்தீவுகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைகளில், அந்நாட்டின் புதிய அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்ற தகவலை அதிபர் இப்ராஹிமிடம் தெரிவிப்பேன்.

அங்கு நடந்த தேர்தல், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, சட்டத்தின் ஆட்சி, வளமான எதிர்காலம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

மாலத்தீவில் நிலையான, ஜனநாயகமான மற்றும் அமைதியான அரசு அமைவதை, இந்தியா எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாலத்தீவு நாட்டின் அதிபராக இம்ராஹிம் முகம்மது சோலி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ஒரு நாள் பயணமாக மாலத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி விழா முடிந்த பின்னர் இந்தியா திரும்பினார்.