மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், இதனால் தொண்டர்கள் வீடிழந்து உள்ளதாகவும், இந்த வன்முறையை கண்டித்தும் அவர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.
கொல்கத்தாவின் நைகாட்டியில் வியாழன் அன்று அவர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தில் கலவரம் மூண்ட இடங்களில் ஒன்று நைகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.