முக்கிய செய்திகள்

மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்கிரஸ் ((Baghini- Bengal Tigress)) என்ற பெங்காலி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேஹல் தத்தா என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரூமா சக்கரபோர்த்தி என்பவர் மம்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட உத்தரவிட கூடாது என்று பா.ஜ.க சார்பில் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகினி திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.