முக்கிய செய்திகள்

மங்குட் புயல் : பிலிப்பைன்ஸ் நாட்டில் 12 பேர் உயிரிழப்பு …

பிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது.

மின்சாரம் தடைபட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல் மற்றும் வான்வழி மார்க்க பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.