மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..

வட கிழக்கு மாநிலங்களில் 5.5 என்ற ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர்,அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மணிப்பூரில் இன்று(மே 25) இரவு 8.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் தென்மேற்கே உள்ள காக்கிங்கிலிருந்து 11 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் மணிப்பூரில் மையம் கொண்டாலும், நிலநடுக்க பாதிப்புகள் அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…

அண்ணாமலையார் கோயிலைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தோப்புக் கரணமிட்டு நூதன போராட்டம்

Recent Posts