முக்கிய செய்திகள்

மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கமல்ஹாசன் கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக., மாணவர்கள் நேற்று(10-10-18) பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகில் நின்று போராடினர்.

அப்போது, கூட்டத்தைக் கலைக்க வலியுறுத்தி, காவல்துறையினர் மாணவ – மாணவியர் மீது லேசான தடியடி நடத்தியதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் அதைக் கண்டிக்கும் வகையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல்,

காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது எனக்குறிப்பிட்டுள்ளார்.