முக்கிய செய்திகள்

மாா்ச் 15ல் புதிய கட்சியை மதுரை மேலுாரில் அறிவிக்கிறாா் டிடிவி தினகரன்..


ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஆா்.கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் டெல்லி உயா்நீதிமன்றத்தில் தமக்கு குக்கா் சின்னத்தை ஒதுக்க தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடா்ந்தாா்.

மேலும் டிடிவி தினகரனுக்கு குக்கா் சின்னம் கொடுக்கக் கூடாது என்று அ.தி.மு.க. சாா்பில் எதிா் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி இந்த மனுக்களின் மீது இறுதி தீா்ப்பு அளிக்கப்பட்டது. தீா்ப்பின் போது டிடிவி தினகரனுக்கு குக்கா் சின்னத்தை ஒதுக்கலாம் என்றும், அவா் பாிந்துரைக்கும் பெயா்களில் ஏதேனும் ஒன்றை அவரது கட்சி பெயராக வழங்கலாம் என்றும் தோ்தல் ஆணையத்திற்கு பாிந்துரை செய்தது.

இந்நிலையில் டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி மதுரை மேலூா் பகுதியில் தனது புதிய கட்சியின் பெயா், கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக தொிவித்துள்ளாா். தனது கட்சிக்காக டெல்லி நீதிமன்றத்தில் பாிந்துறை செய்திருந்த அனைத்து இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆா். அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆா். முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயா்களில் ஒன்றினை தனது கட்சியின் பெயராக டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளாா்.