மெரினாவில் போராட்டம் வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை


சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு முடிந்த பிறகும் மத்திய அரசு அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடை பெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்தின் போட்டோக்கள் சில சமூக வலைத்தளங்ளில் வைரலாகின. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் யார் என்பதை அந்தப் படங்களின் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் போராட்டம் நடத்த தனியாக வேறு இடம் உள்ளது என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மக்களுடன் நான் கலக்கவிருந்த  பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு, ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்துவிடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே’’ என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் வேண்டுகோளுங்கிணங்க ரயில் நிலையங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.