முக்கிய செய்திகள்

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி : தமிழக அரசு..

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முழு முடக்கத்தில் திருமணங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி விளக்கம் அளித்த தமிழக அரசு, திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.