செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை நாசாவின் இன்சைட் ஆய்வுக் கலம் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளது.
நாசா அனுப்பிய இன்சைட் ஆய்வுக் கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
அண்மையில் ஆய்வைத் தொடங்கிய இன்சைட் கலம், செவ்வாய் கிரகத்தில் காற்று வீசிய ஓசையை பதிவு செய்து அனுப்பியுள்ளது.
மணிக்கு 16 முதல் 24 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசிய காற்றின் ஓசையாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆய்வுக் கலத்தின் மீதிருந்த சோலார் தகட்டின் மீது காற்று பட்டதாகவும், இதனால் கலம் அதிர்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் காற்று வீசும் ஓசையை மனிதர்கள் கேட்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.