முக்கிய செய்திகள்

ஜனவரி முதல் மாருதி கார் விலையை உயர்கிறது ..

டொயட்டோ, இசுசு மோட்டார்ஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து அந்தியச் செலாவணி மதிப்பில் சரிவு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வரும் ஜனவரி முதல் மாருதி கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.

இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ளன. உதிரி பாகங்கள் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது,

ரூபாய் மதிப்பில் ஸ்திரமற்ற தன்மையால் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை சமாளிக்க போராடுகின்றன.

இதன் எதிரொலியாக, டொயட்டோ, இசுசு மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஜனவரி ஒன்று முதல் கார்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து மாருதி நிறுவனமும் தனது தயாரிப்பில் விற்கப்படும் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

எனினும், விலை உயர்வு எவ்வளவு என திட்டவட்டமாகக் கூறவில்லை.

வாகனங்களுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் ஜனவரி 2019 முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்தடுத்து மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது.