சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் வரும் அக்டோபர்27-ஆம் தேதிவருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக்.27ல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகினர்.
இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோயிலில் அமைந்துள்ளது.