முக்கிய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில கருத்தரங்கு தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று, அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளராக முன்னாள் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.பாலகிருஷணன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கே.பாலகிருஷ்ணன் கட்சியில் இணைந்தார். 1973 ஆம் ஆண்டு இந்திய மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989 ஆம் ஆண்டு கூடலூர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றார். இப்போது, அக்கட்சியின் மாநில செயலாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.