மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா அறிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை சீனா முட்டுக்கட்டை போட்டுவந்தது.
இன்று ஐநாவில் மசூர் அசார் குறித்த விவகாரம் விதிக்கப்பட்ட போது சீனா மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சர்வதேச தீவிரவாதியாக மசூர் அசார் அறிவிக்கப்பட்டு உள்ளது
இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும். கடந்த பிப்ரவரியில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது நாங்கள்தான் என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூர் அசாரை சரவதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தி வந்தது.