
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள தொலைக்காட்சி செய்தி சேனல் ‘Media One’ க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது.
தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகளை காற்றில் இருந்து உருவாக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
பத்திரிகைகள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கங்கள் கொண்டிருக்க முடியாது என்றும்
அதே போல் ஒரு செய்தி நிறுவனத்தை முடக்குவதற்கு அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே போதுமானது கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.