
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;
சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.