மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளை உடனே காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்குள் கடைகளை காலி செய்ய அறநிலைய இணை ஆணையர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் பதில் மனு அளித்துள்ளனர்.
