மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் இன்றி நேற்று திக் விஜயம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
4 சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்த நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் Madurai meenakshi என்ற யூடியூப் சேனலிலும், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும் கண்டு, அம்மனின் அருளை பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்க்கல் வழக்கமான தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும், அம்பாளின் திருக்கல்யாண கோலத்தை காண அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.