முக்கிய செய்திகள்

மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..


ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரமன் மக சேசே விருது குழு வெளியிட்ட பட்டியலில், இந்தியாவை சேர்ந்த பரத் வத்வானி மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளன.

மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், மனித நேய பணிகளுக்காகவும், பரத் வத்வானியும், வட இந்தியாவில் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அப்பகுதி இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியதற்காகவும் சோனம் வாங்சுக்கும் தேர்வு செய்யப்பட்டதாக விருது குழு தெரிவித்துள்ளது.

கம்போடியாவின் யூக் ச்சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ் மார்டீன்ஸ் குரூஸ், பிலிப்பைன்சின் ஹோவர்ட் டே மற்றும் வியாட்நாமின் தி ஹோவாங் யென் ரோம் ஆகியோரும் ரமன் மகாசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.