முக்கிய செய்திகள்

மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்சினை தீரும் என்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்…

கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே.

நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் நிரந்தர தீர்வை எட்ட இயலாது.

இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.

இதனால் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சினை தொடங்குகிறது.

இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சினையில் சுமூகமான தீர்வை காணலாம்.

இரு மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதே எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்,

மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்சினை தீரும் என்பது ஏமாற்று வேலை. பேசி பேசி தான் காவிரி விவகாரத்தில் ஏமாந்து உள்ளோம் என கூறி உள்ளார்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி கூறும் போது, மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என கூறினார்.