மெல்போர்ன் டெஸ்ட் : புஜாரா சதம்: 443 ரன்களில் இந்திய அணி ‘டிக்ளேர்..

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது.

புஜாரா, கோலி, ரோஹித் சர்மா அரை சதம் அடித்தது முதல் இன்னிங்ஸில் முத்தாய்ப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய 215 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இன்று 228 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் ரன் சேர்க்கும் வேகம் இன்னும் அதிகரித்து இருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கும். முதல் நாள் ஆட்டத்திலும்,

இன்றைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய வேகத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களுக்கு 8 ரன்கள் சேர்த்துள்ளது.

களத்தில் ஹாரிஸ் 5 ரன்களுடனும், ஆரோன் பிஞ்ச் 3 ரன்களுடனும் உள்ளனர்
மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி ஏராளமான பீல்டிங்குகளை கோட்டை விட்டனர்.

ரோஹித் சர்மா, ரஹானேவின் கேட்சுகளை நழுவவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது.

புஜாரா 68 ரன்களுடனும், கோலி 47 ரன்களுடனும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரத்திலேயே விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 48-வது அரை சதத்தை நிறைவு செய்தார்.

சரவண ராஜேந்திரனின் “மெஹந்தி சர்க்கஸ்” ..

கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

Recent Posts