முக்கிய செய்திகள்

வானிலை மையமும் அரசியல் செய்கிறது : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் (ரெட் அலர்ட்) செய்கிறது என இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்து டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைத்தலைவர் டி.டி.வி. தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்த மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பு நவம்பரில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தற்போது வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் (ரெட் அலர்ட்) செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்வித் துறையில் நிறைய புகார்கள் வருவதாக அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் என்னிடம் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்