சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாலையில் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காலையில் இருந்ததைவிட நீர் வரத்து அதிகரிப்பதால் திறக்கப்படும் நீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது.