எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு (17.01.2024)காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இ.பி.எஸ் அணி,ஓ.பி.எஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யதனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை் விழா தமிழகம் முழுவதும் அதிமுக இபிஎஸ்,ஒபிஎஸ், அமமுக, சசிகலா அணிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு (17.01.2024)காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இ.பி.எஸ் அணி,ஓ.பி.எஸ் அணி மற்றும் அமமுக சார்பில் தனித் தனியாக மாலை அணிவித்து மரியாதை செய்யதனர்.
அதிமுக ( இபிஎஸ் அணி )
அதிமுக ( இபிஎஸ் அணி ) சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.உமாதேவன், கற்பகம் இளங்கோ, நகரச் செயலாளர் மெய்யப்பன், புலவர் பழனியப்பன், கவுன்சிலர்கள் அமுதா, தேவன் பிரகாஷ், விவசாய அணி செயலாளர் போஸ் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரியல் தாகூர் ஆடிட்டர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதிமுக (ஒபிஎஸ் அணி )
ஒபிஎஸ் அணி சார்பில் சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன், திருஞானம், ரவி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அமமுக
அமமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் v. தேர் போகி பாண்டி தலைமையில், மாநில பொறியாளர் அணி துணைத் தலைவர் பி எல் சரவணன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் அம்ச கண்ணன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு முருகானந்தம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முருகன், காரைக்குடி வடக்கு நகர கழக செயலாளர் ஏ எல் அஸ்வின் குமார், காரைக்குடி தெற்கு நகரக் கழகச் செயலாளர் எஸ் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாரதி, சாக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் அமராவதி புதூர் கார்த்திக், தேவகோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் தென்நீர் வயல் கணேசன், திருப்பத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் சிவா ,கதிர் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்