எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு : முதல்வர் அடிக்கல்…


சென்னை, மெரினா கடற்கரையோரம், காமராஜர் சாலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவுக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில், நுாற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி, 2017 ஜூன், 28ல் அறிவித்தார்.

இதன்படி, இன்று காலை, 10:30 மணிக்கு, சென்னை காமராஜர் சாலையில், பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவிற்கு, அடிக்கல் நாட்டப்பட்டது.

சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த விழாவில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னிலை வகித்தார்.

நுாற்றாண்டு வரைவு, அழகிய கலைநயம், சிற்ப வேலைப்பாடுகளுடன், 66 அடி அகலம், 52 அடி உயரம் கொண்டதாக, அமைக்கப்பட உள்ளது.