எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல் பாடிய அமைச்சர் ஜெயக்குமார் …

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.

இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பங்காற்றியவர்கள் கவுரவிக்கப்படு வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 31 மாவட்டங்களில், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில், அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய துடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இவை மட்டுமின்றி, மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இதனுடன் சேர்த்து, தமிழ்நாடு என்று மாநிலத்துக்கு பெயர் சூட்டப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழாவும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புகைப்பட கண்காட்சி, பல்வேறு துறைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.