எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.
துணைவேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத்துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
மொத்தம் 41 பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். துணைவேந்தராக பணியாற்றி வந்த கீதாலட்சுமி டிசம்பர் 27-ம் தேதி ஓய்வு பெற்றார்.
அவர் ஓய்வு பெற்ற 2 நாட்களில் புதிய துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.