செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் : நாசா கண்டுபிடிப்பு..

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஆக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

கடந்த 5 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே உள்ள உப்பு நீரில் , ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.