கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டு மானால் சமூக இடைவெளி மிக முக்கியம் என்று கூறிய பிரதமர் மோடி கடந்த மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு லாக்-டவுனை அறிவித்தார்.
திடீரென லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.