மத்திய அமெரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற படையெடுக்கும் கூட்டத்தால் அந்நாட்டு எல்லையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கவுதமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம் பேர், மெக்சிகோ நாட்டின் தாபாசூலா நகர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
குழந்தைகளோடு, குடும்பம், குடும்பமாக வரும் அவர்கள் அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக அந்நாட்டுக்குள் செல்ல முயன்று வருகிறார்கள்.
ஆனால் சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது என்றும் மெக்சிகோ உடனான தெற்கு எல்லை மூடப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியேறிகளின் வருகையால் அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குடியேற புறப்படும் மக்களை தடுக்காவிட்டால், கவுதமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் நாடுகளுக்கும் அளிக்கும் நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அந்த மூன்று நாடுகளிலும் அதிகரித்துள்ள வறுமையால் மக்கள் கூட்டம், கூட்டமாக அமெரிக்கா நோக்கி படையெடுப்பது குறிப்பிடத்தக்கது.