சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை..

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது பள்ளியில் சத்துணவில் 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. முட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில ஒரு கப் பால் வழங்கலாமா என்று அரசு பரிசீலித்து வருகிறது.

ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே திட்டம் பரிசீலிக்கப்பட்டு நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி கைவிடப்பட்டது.
இப்போது மீண்டும் பால் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்

உலக அன்னையர் தினம் இன்று..

Recent Posts