முக்கிய செய்திகள்

பால்வெளி மண்டலத்தில் கருந்துளை கண்டுபிடிப்பு..


பால்வெளி மண்டலத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பால்வெளி மண்டலத்தில் சுற்றித்திரியும் கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை இறுதியில் கருந்துளைக்குள் சென்று அழிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் சிலி நாட்டில் லாஸ் கம்பனாஸ் ((Las Campans)) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய விண்வெளி ஆய்வுக்கூடத்தில் எட்வர்டோ பனாடோஸ் ((Eduardo Banados)) என்ற விஞ்ஞானி ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்போது புதிய பெரிய அளவிலான கருந்துளை ஒன்றினை அவர் கண்டறிந்தார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளை விட 80 கோடி மடங்கு பெரியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருந்துளை பூமியிலிருந்து 130 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருப்பதாகவும் எட்வர்டோ கூறியுள்ளார்.