30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு – எஸ்.பி.ஐ..

பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது.

இதையடுத்து வங்கிகள் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் வீட்டுக் கடன் சந்தையில் நாட்டின் பெரிய கடன் வழங்கு நிறுவனம் என்கிற அந்தஸ்தை தக்க வைத்துக்க்கொள்ளவும்

வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் வட்டி விகிதங்களை குறைக்க முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை..

தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு

Recent Posts