முக்கிய செய்திகள்

திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடையில் ஸ்டாலின்..

திமுகவைச் சேர்ந்த சிலர் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆர்ஆர் .அன்பு பிரியாணிக்கடையில் இருந்த ஊழியர்களைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் திமுகவிலிருந்து நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள் விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர்.