முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால்,

பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்திருக்கிறார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி மாபியாக்களாக செயல்படுவதாக மோடி அவதூறு பரப்புவதாக மம்தா குற்றம்சாட்டியிருக்கிறார்..

தங்கள் கட்சியினர் மீதான புகாரை நிரூபித்தால், 42 வேட்பாளர்களையும் வாபஸ் பெறுவதாக கூறியிருக்கும் மம்தா பானர்ஜி,

ஒருவேளை புகாரை நிரூபிக்கத் தவறினால், 100 தோப்புக்கரணங்கள் போட, மோடி தயாரா? என்றும் சவால் விடுத்திருக்கிறார்.