கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை


கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து அரசுடன் ஒத்துழைத்தால் தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மாணவர்களுடன் காணொலி காட்சி கலந்துரையாடினார்.

மாணவர்களுடன் பேசிய அவர், உலகத்தில் எல்லோருக்கும் எல்லாம் தெரியாது, இது அரசாங்கத்துக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டார். தனியாக அனைத்து மாற்றங்களையும் கொண்டு வர முடியும் என அரசாங்கங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.