பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் மதிமுக, த.பெ.தி.க, மே17 இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சமூகநீதியை அழிக்கும் மோடியே திரும்பிப்போ என மறியல் போராட்டத்தில் முழக்கமிட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்ட இன்று பிரதமர் மோடி மதுரை வர உள்ளார். பிரதமரை எதிர்த்து வைகோ கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தி வருகின்றார்.பின்னர் வைகோவை போலீசார் கைது செய்தனர்