முக்கிய செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை… எங்களுக்கும்தான்: சமாளிக்கும் மோடி

பாரதிய ஜனதா தலைவர்களுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. அண்மையில் சில நாட்களாக அமித் ஷாவும், அவருடைய பேச்சை மொழி பெயர்த்தவருமாக மாறி, மாறி உளறி வந்தனர். இப்போத, பிரதமர் மோடியும் அவர் பங்குக்கு ஒரு மார்க்கமாக பேசத் தொடங்கி விட்டார்

நாடு முழுவதும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் போட்டியில் பங்கேற்கும் இளைஞர்கள் மத்தியில், காணொலி மூலம் உரையாற்றிய மோடி, “அனைத்தையும் அறிந்தவர்கள் என்று யாருமே இல்லை… எங்கள் அரசுக்கும் இது பொருந்தும்தானே” என்று பேசியுள்ளார். அண்மைக் காலமாக மத்திய அரசின் மீது அதிகரித்து வரும், அதிருப்தியாலும், விமர்சனத்தாலும் ஏற்பட்ட சோர்வே பிரதமரின் இத்தகைய பேச்சுக்குக் காரணம் என்கிறார்கள். அது மட்டுமல்ல… இளைஞர்களுக்கு  சொன்ன அறிவுரை அனைத்தும் அவருக்கும் பொருந்திப் போவதைப் போலவே இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதில் இருந்து…

 உலகில் அனைத்தும் தெரிந்தவர்கள் என்று யாருமே இல்லை. ஆளும் அரசுக்கும் அந்தக் கூற்று பொருந்தும்.  அரசு மட்டுமே தனித்து அனைத்தையும் சாதித்துவிடும் எனக் கருதினால் அது மிகப்பெரிய தவறாகி விடும். மக்கள் அனைவரும் இணைந்து முடிவெடுத்தால் எத்தகைய மாற்றத்தையும் சாதிக்க முடியும். புதுமை என்பது குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுடன் முடிவடையக் கூடியது இல்லை எனவும், அது தொடர்ச்சியான செயலாக்கம்.

புதுமைகள் மலர்வதற்கு கேள்விகள் அவசியம்…கேள்விகளைக் கண்டு ஒருபோதும் கூச்சமடைந்து விலகிச் செல்லக்கூடாது. புதுமைகள் மூலமாக மட்டுமே உலகின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

அவரது இந்தப் பேச்சு அவருக்கே கூறிக்கொண்ட அறிவுரையைப் போலத்தானே இருக்கிறது!