முக்கிய செய்திகள்

பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..

அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு உள்நாட்டு வளர்ச்சி குறித்து அக்கறை இல்லை என விமர்சித்த மன்மோகன் சிங், தற்போதைய அரசியல் சூழல் கவலை அளிப்பதாகவும் தெரித்துள்ளார்.

தற்போது நிலவும் நல்லிணக்கத்திற்கு எதிரான போக்கு கட்டாயம் மாற வேண்டும் எனவும் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.