மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல ; சோனியா காந்தி..

பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல என சோனியா காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கு முன்பு அவர் யாகம் நடத்தினார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்பின் சோனியா காந்தி பேரணியாக சென்றார்.

அவரிடம் பிரதமர் மோடி வலிமையானவரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையான தலைவர் அல்ல.

வாஜ்பாய் ஜி சக்தி வாய்ந்தவராக இருந்தபொழுதும் கடந்த 2004 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதனை மறக்க கூடாது என சோனியா காந்தி கூறியுள்ளார்.

இதேபோன்று ராகுல் காந்தி கூறும்பொழுது, இந்திய வரலாற்றில் பல மனிதர்கள் நாட்டு மக்களை விட வலிமையானவர்கள் மற்றும் பெரியவர்கள் என அகந்தையுடன் செயல்பட்டனர்.

நாட்டு மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின் அவரது வலிமை முழு அளவில் தெரியும் என கூறினார்.

பரப்புரையில் ராகுல் காந்தியின் உயிருக்கு ஆபத்து? -உள்துறை அமைச்சகம் மறுப்பு..

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: மேற்குவங்கம், திரிபுராவில் 81% வாக்குப்பதிவு

Recent Posts