முக்கிய செய்திகள்

ஓமனில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..


பிரதமர் மோடிக்கு மஸ்கட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டான் சென்று, மன்னர் அப்துல்லாவை சந்தித்தார்.

இருதரப்புகள் உறவு குறித்து ஆலோசித்து, பின் பாலஸ்தீனம் புறப்பட்டார். அங்கு பிரதமர் ஹமதல்லா, அதிபர் மெகமூத் அப்பாஸ் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதையடுத்து துபாயில் நடைபெற்ற உலக அரசியல் மாநாட்டில் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில் அபுதாபி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஓமன் சென்றார். தலைநகர் மஸ்கட்டில் துணை பிரதமர் செய்யிது பஹாத்பின் முகமது மோடியை வரவேற்றார்.

தொடர்ந்து கிராண்ட் ஹையத் ஹோட்டலில் ஓமன் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.