காங்கிரசின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் அதன் கண்பார்த்து எப்படி பேச முடியும்?: மோடி

 

நாட்டில் வளர்ச்சிக்கான யுத்தம் நடைபெற்று வருவதையே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் உணர்த்துவதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசிய பின்னர் பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நாடாளுமன்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகின்றனபிரதமராகும் விருப்பத்துடன் உள்ள ஒருவர் என்னை எழுந்திருக்குமாறு கூறினார் ஏன் அவர்(ராகுல்) இவ்வளவு அவசரப்படுகிறார், மக்கள் தீர்மானிப்பார்கள். என்னை பிரதமர் பதவியில் அமர்த்தியவர்கள் 125 கோடி மக்கள். இன்றைய விவாதம் எதிர்க்கட்சிகளின் எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. பெரும்பான்மை இல்லாத போதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சியிடம் தலைமைப் பண்பு இல்லாதது வெளிப்பட்டுள்ளது. இருளில் கிடந்த 18000 கிராமங்களில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையோடு அரசு செயல்படுகிறது. முந்தைய அரசு ஏழை எளிய மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 15 கோடி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுபட்டுள்ளனர். தற்போதைய சூழலில் 120 செல்போன் உற்பத்தி ஆலைகள் உள்ளன. கருப்பு பணத்திற்கு எதிரான யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்தியா நம்பிக்கையுடன் இருக்கிறது, உலகமும் இந்தியா மீது நம்பிக்கையுடன் இருக்கிறது. தூய இந்தியாவின் மீது, இந்திய வளர்ச்சியின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையில்லை.வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது

தவறான வழியில் செல்லும் பணத்தை தொழில்நுட்ப உதவியால் தடுத்து நிறுத்துகிறோம். உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் மீது கூட காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை.காங்கிரஸ் கட்சி எல்லோரையும் அவ நம்பிக்கையுடனே எதிர் கொள்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு என நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனர். ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எனக் கூறி உண்மையின் குரல்வளையை நெரிக்கின்றனர்ரபேல் ஒப்பந்தம் முழுக்க முழுக்க வெளிப்படைத் தன்மை கொண்டது. சர்ஜிகல் தாக்குதலை எப்படி காங்கிரஸ் பொய்யான தாக்குதல் எனக் குறிப்பிடுகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்க முயல்கின்றனர்ஸ்திரத்தன்மை அற்ற நிலையை பல நேரங்களில் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டும் எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுகிறேன். காங்கிரஸ் கட்சியின் கடந்த காலம் தெரிந்தவர்கள் அவர்களின் கண்ணைப் பார்த்து எப்படி பேச முடியும். ராகுல் காந்தி இன்று கண்ணடித்ததையும் நாடே பார்த்திருக்கிறது

நான் மக்களின் துன்பங்களை பங்கு போட்டுக்கொள்ளும் பங்குதாரன்தான்

நாங்கள் நாட்டின் பாதுகாவலர்கள், நீங்கள்(காங்கிரஸ்) நாட்டை விற்பவர்கள்

பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதையே காங்கிரஸ் பிரதானமாகக் கொண்டுள்ளது

என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்; ராணுவ வீரர்களை அவமதிக்காதீர்கள்

கள எதார்தத்தை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது

காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுபடுத்தத் துடிக்கிறது

மூடப்பட்ட அறைக்குள்ளிருந்து, காங்கிரஸ் ஆந்திராவையும் தெலுங்கானாவையும் பிரித்தது

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன

ஆந்திராவையும், தெலுங்கானாவையும் காங்கிரஸ் பிரித்ததன் விளைவை தெலுங்கு தேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது

ஒரு குடும்பத்தின் விருப்பத்திற்காக இரு முறை தேர்தல் நடைபெற்றது

ஆந்திராவுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு திட்டத்தை சந்திரபாபு நாயுடு வரவேற்றார்

தெலுங்கு தேசம் கூட்டணியிலிருந்து பிரிந்தபோது சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன்

ஆந்திர மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது

ஆந்திர மக்களின் நல்வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது

தெலுங்கானாவை ஆட்சி செய்யும் கட்சி வளர்ச்சி அரசியலையும், ஆந்திராவை ஆளும் கட்சி வெற்று அரசியலையும் கடைபிடிக்கின்றன

மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் இல்லை என சந்திரபாபு நாயுடு பொய் சொல்கிறார்

மாநில அரசுக்கு பாதிப்புகள் ஏற்படும் பிரிவுகள் இருந்ததால் முதல்வராக இருந்த போது ஜி.எஸ்.டி.யை எதிர்த்தேன்

நான் முதலமைச்சராக இருந்த காரணத்தால், மாநில முதலமைச்சர்களின் கோரிக்கைகளை புரிந்து நிறைவேற்ற முடிகிறது

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க உறுதி பூண்டுள்ளேன்

ஒரு மணி நேரத்தைக் கடந்து பதிலுரையைத் தொடர்கிறார் பிரதமர் மோடி

விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை வழங்காத கட்சி காங்கிரஸ்

கடனைத் திருப்பி செலுத்தாமல் தப்பியவர்களுக்கு காங்கிரஸ் உதவியுள்ளது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வங்கிகளின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

எனது அரசு வங்கிகளிலிருந்து கொள்ளை போன பணத்தை மீட்டு வருகிறது

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு புள்ளி விவரங்களுடன் பிரதமர் பதில்

காங்கிரஸ் வைத்துவிட்டுப் போன கடன்களை எல்லாம் திருப்பி அடைத்துள்ளோம்

பெண்களுக்கு உரிமையளித்து அவர்களை முதன்மைப் படுத்துவதையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்

ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மேம்பாடுகள் முன் எப்போதையும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது

வேலை வாய்ப்புகள் குறித்து ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன

தனிமனிதர்கள் மீது சந்தேகம் கொண்டு நிகழும் கும்பல் வன்முறை கண்டனத்திற்குரியது

கும்பல் வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

அண்மையில் ஒரு லட்சம் மருத்துவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்

கடந்த ஓராண்டில் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன

இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிலுரையில் தெரிவித்தார்.

Modi Speech in Lokh saba

மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிப்பு….

Recent Posts