இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்..

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது.

நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய பிரதமர் மோடி, ஊரடங்கை 4வது கட்டமாக நீட்டிப்பதாக அறிவித்தார்.

மேலும் பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியா வலுவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், காங்., மோடியின் உரையை விமர்சித்துள்ளது.
மோடியின் உரை குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் பதிவிட்டதாவது:

பிரதமர் அவர்களே.. நாட்டு மக்களிடம் நீங்கள் ஆற்றிய உரை, நாட்டிற்கும், ஊடகங்களுக்கும் வெறும் தலைப்பு செய்தியாக மட்டுமே இருக்கும். மக்களுக்கு மனமுவந்து உதவி அளிப்பதாக நீங்கள் அறிவித்திருந்தால், காங்., அதை வரவேற்றிருக்கும்.

தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பாதுகாப்பாக வர நடவடிக்கை தேவை.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

காங்., கட்சியின் மணீஷ் திவாரி தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியின் உரையை ஒரே வார்த்தையில் கூறிவிடலாம்.. ‘தலைப்புச்செய்தி.. 20 லட்சம் கோடி.. விவரங்கள் இல்லை..’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ‘பிரதமர் மோடி அறிவித்த நிதி தொகுப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தாமதப்படுத்தக்கூடாது.

இதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கிறோம். இதன் விவரங்கள் வெளியாகும்போது, வெவ்வேறு துறைகள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

காங்., கட்சியின் அபிஷேக் சிங்வி தனது டுவிட்டர் பதிவில், ‘ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார் மோடி.

இதுபோல அவரிடமிருந்து பல அறிவிப்புகளை கேட்டிருக்கிறோம். இது என்ன ஆகும் என்பதை பார்ப்போம்’ என பதிவிட்டுள்ளார்.