முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியின் பயண விவரம் : சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல திட்டம்..


சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாமல்லபுரம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2018 ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி நாளை தமிழகம் வருகிறார். காலை 9.25-க்கு சென்னை வரும் பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஐ.ஐ.டி.க்கு வருகிறார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்தை பிற்பகலில் தொடங்கி வைக்கிறார்.